கானகத்து மிச்சமாய் கடந்த காலத்தின் எச்சமாய் கல்லூரியின் கருத்த மூலையில் கம்பீரமாக நெருப்பின் மலர்களை வீசி காற்றைக் கொளுத்தி கதிரவனைக் கலங்கடிக்கும் அந்த மஞ்சள் கொன்றை, இன்று மௌனமாக தலை குனிந்து தன் உடல் வழியே வழிய விடுவதை மழை நீர் என்கிறாய் நீ! இல்லை நண்பா இல்லை! மண்ணைத் தொட்ட நீரின் சிலுசிலுப்பில் வேர் சிலிர்க்கும் முன்பே, நீரூற்று பாறைகளின் வேர்க்கால்களை துளைத்த பெப்சியின் ஆழ்துளை பைப்புகள், வானத்தின் ஈரத்தை களவாடும் ஈனத்தை உணர்த்த – [...]
ஆகஸ்ட், 2009 க்கான தொகுப்பு
மழைக் காட்சி
Posted in இரவி, குறிச்சொல் இடப்பட்டது கவிதை, பெப்சி, மழை on ஆகஸ்ட் 18, 2009 | 2 மறுமொழிகள் »
ரணமாகும் கணங்கள்
Posted in செஞ்சுடர், குறிச்சொல் இடப்பட்டது அனுபவம், கல்லூரி, கவிதை on ஆகஸ்ட் 15, 2009 | 2 மறுமொழிகள் »
கல்லூரிப் பாலைவனத்தில் கற்பகத் தருக்களைத் தேடியலையும் கலாமின் கனவு வாரிசுகள் நாங்கள் எங்களின் புனித வரலாறு வெளியாகும் போதெல்லாம் “கூவம்” கூட முகம் சுளிக்கும் முடிந்தால் மூக்கைப் பொத்தியவாறே கேளுங்கள் நீங்களும்! எங்களின் அலாரச்சத்தத்தில் எல்லோரும் எழுந்த பின்பே எட்டுமணி சுமாருக்கு, எட்டிப் பார்ப்போம், போர்வைக்குள்ளிருந்து! மிருகங்களைக் காரணம் காட்டி மிச்சம் செய்வோம், பேஸ்ட்டையும் சோப்பையும்! முகம் கழுவி, தலை கலைத்து அப்பாவிடம் திட்டுவாங்கி புறப்படுவோம் கல்லூரிக்கு! ஜீவ நதியில் ஓடைகள் கலப்பது போல வரும் வழியில் [...]