அதிர்ச்சியாகத்தான்
இருந்தது!
இருக்காதா பின்னே,
பகத்சிங் பிறந்த நாளன்று
அரசு விடுமுறை!
எப்படி சாத்தியம் இது?
அவனென்ன,
காந்தியா?
கதராடை உடுத்தி,
மக்களின்
கோவணம் உருவ!
வெள்ளைக்காரன்,
கால் நக்கி
மெடல் வாங்க!
என்னதான் நடந்தது,
நடந்தபடியே யோசித்த போது
ஞாபகம் வந்தது,
நேற்று
ஆட்டோக்கார “காம்ரேடு”
கடலை பொரி கொடுத்தாரே!
அடடே!
ஆயுத பூசை!
என்ன பொருத்தம்?
தூக்கிய
துப்பாக்கியை மட்டுமல்ல,
தன்
வார்த்தைகளையே தோட்டாக்களாக்கி,
வாரிசுகளிடம்
வழங்கியவனின்
பிறந்தநாளில்
வாழத்துடிக்கிறோம்
வற்றாத,
அவன் நினைவுகளைப் போல!
.
.
.
.
இன்னும்,
தெரிந்து சிலரும்
தெரியாமல் பலரும்
கொண்டாடுகிறார்கள்
ஆயுத பூசை!
யாருக்கான ஆயுதம்
யாருக்கான பூசை?
சும்மாவே இருந்து,
சோறு தின்று,
தொந்தி வளர்ப்பவனுக்கு
திரிசூலம் ஆயுதமென்றால்,
ஊரையே வெளிச்சமாக்க,
உயிரைப் பணயம் வைத்து
உயரக் கம்பங்களில்
ஏறும் எமக்கு
செருப்புதான் ஆயுதம்!
கண நேரம்
கடந்து செல்லும் முன்
மூக்கைப் பிடிக்கச் செய்யும்
உன்
மலச்சாக்கடையில்,
மூச்சடக்கி,
மூழ்கி எழும் எமக்கு
மலவாளிதான் ஆயுதம்!
உன் நுகர்வு வெறியின்
எச்சங்களால்,
உன் மனதைப் போலவே
குப்பை கூளமாகிப் போன
சாலைகளை
பெருக்கித் தள்ளும்
எமக்கு,
துடைப்பமே ஆயுதம்!
அனைவரும்
இந்து என்றாய்,
செய்யும் தொழிலே
தெய்வம் என்றாய்,
சேர்த்து வைத்துக்
கொண்டாடு பார்க்கலாம்,
உன் நவராத்திரிக் கொலுவில்,
செருப்பையும்,
மலவாளியையும்,
துடைப்பத்தையும்,
திரிசூலத்தின்
மூன்று முனைகளாய்
நினைத்து!
-அருண்மொழி
அவன் அவன்
செய்யும் தொழிலில்
எதை தெய்வமாக நினைக்கின்றானோ
அதை கொலு வைக்கின்றான்.
உனக்கு
தொழிலாக
செருப்பும்,
மலவாளியும்,
துடைப்பமும்
இருந்தால்
உன் நவராத்திரிக் கொலுவில்,
திரிசூலத்தின்
மூன்று முனைகளாய்
நினைத்து
உன் வீட்டில் கொலு வை.
பார்ப்பான் வீட்டு கொலுவில், மணியாட்டும் புராகிதர் பொம்மைகள், கருவிகள் மட்டும் தான் வைக்கிறார்களா? விளக்குங்கள் ராஜா?
என்னாங்க விடிவெள்ளி இந்த வெளக்கெண்ணைக்கிட்ட போயி , விளக்குங்கு- துலக்குங்கங்கன்னுட்டு.
//அவன் அவன்
செய்யும் தொழிலில்
எதை தெய்வமாக நினைக்கின்றானோ
அதை கொலு வைக்கின்றான்//
ஏம்ப்பா ராசா, இந்த ஆர்.எஸ்.எஸ்.கார அம்பிகளெல்லாம் ஒவ்வொரு ஆயுத பூசை தவறாம அறுவா, கத்தி, திரிசூலம்னு கொலைக் கருவிகளை கொலுவா வச்சி பூசை பண்ணுறாளே, அவாளுக்கெல்லாம் அதுதான் ‘தெய்வம்’ அப்படித்தானே!
அதான் பார்த்தமே குஜராத் தொடங்கி நேற்றைய பீகார் வரைக்கும் இந்த ‘தெய்வங்களை’ கொண்டே கொலைவெறியாட்டம் போட்டதை!
எலே அதனாலதான் சொல்றோம் உன்னோட தெய்வம் வேற, என்னோட தெய்வம் வேற! இந்த கொலைகார கூட்டத்தோட சங்காத்தமே வேணாண்றோம். ஆனா, நீதானே நானும் இந்து நீயும் இந்து வா அவனை உதைக்கலாம்னு கூப்புடுறே.
அதுக்குத்தானே அப்பு விடிவெள்ளி கவிதை போட்டிருக்காரு.
அது சரி செருப்பையும் மலவாளியையும் துடைப்பத்தையும் வச்சி நான் கூட கொலு கொண்டாடத்தான் போறேன் இந்த மூன்றோடு உன்னையும் சேர்த்து!
தோழருக்கு எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்